கன்னியாகுமரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மக்கள் பிரச்சனைகள் பல ஆய்வு செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதர், சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம், பிரின்ஸ், ராஜேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் மற்றும் துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.