ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி 8 விக்கெட்டுக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியை நடிகர் தனுஷ் நேரில் சென்று கண்டுகளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.