நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநாபன் (வயது 22). இயற்கை மற்றும் சூற்றுசூழல் ஆர்வலரான இவர், கார்பன்டை ஆக்ஸைடால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்து, இதற்காக இந்தியா, பூடான், மியான்மார், வங்காளதேசம், நேபாளம், சீனா போன்ற 12 நாடுகள் வழியாக கொரியாவிற்கு சைக்கிள் மூலமாக பயணம் செய்ய முடிவு செய்தார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.