Thursday, September 28, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்அணை பகுதிகளில் மழை நீடிப்பு

அணை பகுதிகளில் மழை நீடிப்பு

தென்மேற்கு பருவமழை வருகிற 4-ந்தேதி தொ டங்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. பேச்சிப் பாறை அணைப்பகுதியில் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அங்கு மழை நீடித்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்ச மாக 44 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிக ரித்துள்ளது.

பெருஞ்சாணி, புத்தன் அணை, சிற்றாறு, களியல் பகுதிகளிலும் மழை பெய்தது. மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 44, பெருஞ்சாணி 19.8, சிற்றார் 1- 9.4, களியல் 12.8, குழித்துறை 12.4, புத்தன் அணை 17.2, குளச்சல் 3, பாலமோர் 7.5 அணை பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் கிழக்கு பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. கன்னியா குமரி, அஞ்சுகிராமம், ஆரல் வாய்மொழி பகுதியிலும் வெயில் கொளுத்தியது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே சிரமப்பட்டனர். நாகர்கோ வில் பகுதியில் உள்ள சாலை களில் மதியம் நேரங் களில் கானல் நீராக காட்சி அளித்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments