தென்தாமரைகுளம் பேரூராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.10.20 லட்சம் மதிப்பில் முகிலன் குடியிருப்பு, இலந்தையடிவிளை, தென்தாமரைகுளம், வெள்ளையன் தோப்பு உள்ளிட்ட ஊர்களில் சின்டெக்ஸ் மற்றும் பைப்புகள் அமைத்து குடிநீர் வழங்கும் பணி நடைபெற உள்ளது. இதன் முதற்கட்டமாக 9-வது வார்டுக்குட்பட்ட வெள்ளையன் தோப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணி தொடங்கியது. வார்டு கவுன்சிலர் ஆல்வின் தலைமை தாங்கினார். வெள்ளையன்தோப்பு ஊர் தலைவர் ரெத்தின சிகாமணி, முன்னாள் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப் கலந்துகொண்டு சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகி தாமரைபிரதாப், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர் ராகவன், வெள்ளையன்தோப்பு ஊர் துணை தலைவர் தங்கதுரை, செயலாளர் சுயம்புலிங்கம், இணை செயலாளர் பொன்னுலிங்கம், பொருளாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.