தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை யின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோணம் அரசு தொழில் நுட்ப கல்லூரி வளாகம் அருகில் புதிதாக அமைக் கப்படவுள்ள தொழில்நுட்ப பூங்கா குறித்த தொழில்மு னைவோர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நாகர்கோவில் மணிமேடை அருகிலுள்ள தனியார் விடுதி அரங்கில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் குமரகுருபரன், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், மேலாண்மை இயக்குநர் ஜாண் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச் சரின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவி யல் சார்ந்த சேவைகள் தமிழகத்தில் தழைத்து வளர தமிழ்நாடு அரசின் கொள்கை அடிப்படை யில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம், சென்னை மற்றும் இரண்டாம் நிலை நக ரங்களான கோயம்புத்தூர், மதுரை (இரண்டு இடங் கள்). திருச்சி, சேலம், திரு நெல்வேலி மற்றும் ஓசூரில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங் களை (எல்கோசெஸ்கள்) உருவாக்கி உள்ளது.
தற்போது கன்னியா குமரி மாவட்டம், நாகர் கோவில் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி வளாகம் அருகில் 1.65 லட் சம் சதுர அடி பரப்பளவு கொண்ட புதிய எல்காட் தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புதுமை பூங்கா அமைப்பதற்கு முன் மொழியப்பட்டுள்ளது. இப்பூங்கா அமைவதன் வாயிலாக கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக் குடி ஆகிய தென் மாவட் டங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25,000 பேருக்கும் மேற் பட்ட வேலைவாய்ப்பினை உருவாக்குவதோடு, பல தொழில்முனைவோரை உருவாக்கி கன்னியாகுமரி மாவட்ட தொழில்நுட்பமற் றும் பொருளாதார வளர்ச் சிக்கு வித்திடும்.
மேலும், குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நிலப்பரப்பு களை ஒருங்கே பெற்றுள்ள குமரி மாவட்டத்தின் அழ கிய கடற்கரைகள், எழில் காடுகள், நீர்நிலைகள், காலநிலை, இயற்கை சூழல், மனித வளம் மற்றும் இதர காரணிகள் சர்வதேச முத லீட்டார்களையும் தொழில் நிறுவனங்களையும் இத்தக வல் தொழில்நுட்ப பூங்கா விற்கு எளிதில் ஈர்ப்பதோடு, மென்பொருள் தயாரிப்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கான மனிதவளம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமாக உள்ளதால் பெருநகரங் களை விட குறைந்த செல வில் மனிதவளம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களுக்கு மூலதனமாக அமை யும் சூழல் இங்கு உள்ளது.
இன்றைய தினம், தமிழ் நாடு முதல்-அமைச்சர் நாகர்கோவில் மாநகராட்சி புதிய கலைவாணர் மாளிகை கட்டிடத்தினை திறந்து வைத்த நிகழ்ச்சியில், நாகர் கோவிலில் புதிய எல்காட் தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புதுமை பூங்கா அமையவிருக்கும் புதிய கட்டிடத்தின் மாதிரி வரைபடத்தை பார்வையிட் டார். தொடர்ந்து, தமிழ் நாடு அரசின் நிதி ஒதுக்கீடு ஆணை பெற்று எல்காட் தகவல் தொழில்நுட்பம் ஆராய்ச்சி மற்றும் புதுமை பூங்கா அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார். மாவட்ட வருவாய் அலுவ லர் (எல்காட்) கண்ணன் உட்பட துறை அலுவலர்கள், தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.