காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி யின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. விளவங்கோடு தாலுகா காங்கிரஸ் அளவிலான இயக்கம் சார்பில் நெடுங்குளம் சந்திப்பில் கையில் தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக எட்வின் ஜேசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சதீஷ், ரத்தினகுமார், மஞ்சாலுமூடு சுந்தர், மாவட்ட கவுன்சிலர் அம்பிளி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் வட்டார ஒன்றிய தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.