ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள விஜய்வசந்த் எம்பி அலுவலகம் முன்பு இருந்து மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் ஊர்வலமாக சென்று வெட்டூர்ணிமடம் சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் போலிங் பூத் தலைவர் ராதா கிருஷ்ணன், நாகர்கோவில் மேற்கு மண்டல தலைவர் சிவ பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட் டக்காரர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.