நாகர்கோவில் வடசேரி பள்ளிவிளை ரயில்வே தண்டவாளம் பகுதியில் நேற்று வாலிபர்கள் சிலர் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதி கொண்டனர். இதில் மது பாட்டில்களை உடைத்து ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே எதிர்தரப்பை சேர்ந்த 2 பேரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மீண்டும் தாக்கிக்கொண்டனர். இதை பார்த்ததும் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த காவலாளிகள், போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதுதொடர்பாக இதுவரை எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.