Wednesday, December 6, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்கொட்டாரத்தில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

கொட்டாரத்தில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் அகஸ்தீஸ் வரம் வட்டாரத்துக்குட்பட்ட 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோவில் கலையரங்கத்தில் நடந்தது. அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த கர்ப்பிணி பெண்களுக்கு கழுத்தில் பூமாலை அணிவிக்கப்பட்டு முகத்தில் சந்தனம் பூசி, நெற்றியில் குங்குமம் திலகமிட்டு தலையில் மலர் தூவி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு தாம்பூல தட்டு, வெற்றிலை, பாக்கு, பூமாலை, இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள் மற்றும் சேலையுடன் சீர்வரிசை பொருட்கள் வழங்கக் கட்டன.

கர்ப்பிணி பெண்களுக்கு இந்த சீர்வரிசை பொருட்களை அகஸ்தீஸ்வ ரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீதா தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பரதி முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா மேரி வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர் வக்கீல் சீனிவாசன், தி.மு.க. நிர்வாகிகள் வினோத், அகஸ்தலிங்கம், தமிழ்மாறன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி கிங்ஸ்லி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார ஒருங்கி ணைப்பாளர் அருண் சுலைமான் நன்றி கூறினார். விழாவில் கன்னியாகுமரி, அழகப்பபுரம் மற்றும் கொட்டாரம் தொகுதி அங்கன் வாடி பணியா ளர்கள் வளைகாப்பு பாடல் பாடினார்கள். அங்கன்வாடி பணியாளர் பகவதி தேவி வாழ்த்து பாடல் பாடினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments