Friday, June 2, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்பாதிரியாரின் ஆபாச படங்களை அனுப்பியவர்கள் விபரங்கள் சேகரிப்பு- சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பாதிரியாரின் ஆபாச படங்களை அனுப்பியவர்கள் விபரங்கள் சேகரிப்பு- சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் குடயால் விளை பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). இளம்பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் சாட்டிங் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். பாதிரியார் தெரிவித்த வாக்குமூலம் மற்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்-டாப் செல்போனில் உள்ள தகவல்களை வைத்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2 வார காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பாதிரியாரின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து பாதிரியாரின் ஆபாச படங்கள் மற்றும் ஆபாச சாட்டிங் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகிறார்கள். ஏற்கனவே பாதிரியாரின் செல்போனை எடுத்து சென்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவரை கைது செய்தால்தான் பாதிரியாரின் மேலும் ஒரு செல்போன் மீட்கப்படும். அந்த செல்போனில் ஏதாவது வழக்கு தொடர்பான ஆதாரங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள னர்.

இந்நிலையில் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தவறான தகவல்களை பரப்பி வருவதாக காவல்துறை கவனத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்கள் ஆதாரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் 84389 81930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வழக்கை திசை திருப்பும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments