Tuesday, September 26, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்கிறிஸ்தவ ஆலய பணியாளர்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்தவ ஆலய பணியாளர்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்களின் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றம் கல்வி மேம்பாட்டிற் காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உப தேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது. இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேருவ தற்கான விண்ணப்பப் படி வங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபனை் மையினர் நல அலுவல கங்கள், மாவட்ட சிறு பான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச் சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்ட ஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய் யப்பட்ட திருச்சபைகளிட மிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேற்காணும் திருச்சபை களின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பி னர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழி லாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் கட்டுப் பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங் கப்பட்டு வரும் நலத் திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

கல்வி உதவித்தொகை 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1 லட்சமும், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரணம் உதவித் தொகை ரூ.20 ஆயிரமும், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ. 5 ஆயிரமும், திருமண உதவித் ெதாகை ஆண்களுக்கு ரூ. 3 ஆயிரம் (ம) பெண்களுக்கு ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித் தொகை ரூ. 3 ஆயிரம், கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments