Thursday, September 28, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு- முதலமைச்சர் வழங்குகிறார்

போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு- முதலமைச்சர் வழங்குகிறார்

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.5.2022 அன்று சட்டப்பேரவையில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையிலன் போது “சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து அரசாணை 3.8.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துரைக்கேற்ப கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படுகிறது.

வெ.பத்ரிநாராயணன் (காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்), டோங்கரே பிரவின் உமேஷ் (காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம்), மா. குணசேகரன், (காவல் துணை கண்காணிப்பாளர், இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம்), சு.முருகன் (காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம்), இரா.குமார், (முதல் நிலை காவலர்-1380, நாமக்கல் மாவட்டம்) போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் அஸ்ரா கர்க், (காவல் துறைத் தலைவர், தென் மண்டலம், மதுரை) சீரிய பணியை அங்கீகரித்து  ரொக்கப் பரிசு இல்லாமல், இந்த “சிறப்பு பதக்கம்” தனி நேர்வாக வழங்கப்படுகிறது.

அஸ்ரா கர்க்கின் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த கண்காணிப்பின் மூலம் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மூத்த அதிகாரிகளுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார் மற்றும் 2022-2023-ல் 1843 நபர்கள் பிணைக்கப்பட்டு உள்ளனர். இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியது. விருதுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சுதந்திரதின விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments