Tuesday, September 26, 2023
No menu items!
Homeஇந்தியா செய்திகள்'ஜீரோ போக்குவரத்து' வசதியை நிராகரித்தார் முதல்-மந்திரி சித்தராமையா

‘ஜீரோ போக்குவரத்து’ வசதியை நிராகரித்தார் முதல்-மந்திரி சித்தராமையா

கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்றுள்ளார். இதனால் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. பல்வேறு தரப்பினரும் சித்தராமையாவை நேரில் சந்தித்து சால்வை, மாலை, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், முதல்-மந்திரி சித்தராமையா தன்னை சந்திக்க வருபவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து டுவிட்டர் பதிவில் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘என்னை சந்திக்க வரும் பொதுமக்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் இருந்து மாலைகள், சால்வைகள் பெறுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். இது எனது வீடு மற்றும் அலுவலகம், பொது நிகழ்ச்சிகள் அனைத்து இடங்களுக்கும் பொருந்தும். தங்களின் அன்பை வெளிப்படுத்த விரும்புபவர்கள் சால்வை, மாலைகளுக்கு பதிலாக எனக்கு புத்தகங்கள் மட்டும் கொடுங்கள். உங்களின் அன்பு எப்போதும் என் மீது இருக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பதிவிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், ‘எனது வாகனத்துக்கு வழங்கப்பட்ட ‘ஜீரோ போக்குவரத்து’ வசதியை திரும்ப பெரும்படி பெங்களூரு நகர போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்துள்ளேன். இந்த ஜீரோ போக்குவரத்து காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த ஜீரோ போக்குவரத்து வசதியால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதை தடுக்க இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். முக்கிய பிரமுகர்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது, அவர்கள் தடையின்றி செல்வதற்காக ‘ஜீரோ போக்குவரத்து வசதி’ செய்து கொடுப்பது வழக்கம். இந்த ஜீரோ போக்குவரத்து வசதியின்போது முக்கிய பிரமுகர்கள் வாகனங்கள் செல்லும்போது, மற்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். முக்கிய பிரமுகர்கள் சென்ற பிறகே, மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனை தடுக்க புதிய முதல்-மந்திரி சித்தராமையா, தனக்கு ஜீரோ போக்குவரத்து வசதி வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments