Wednesday, March 29, 2023
No menu items!
Google search engine
Homeஇந்தியா செய்திகள்சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்- மத்திய அரசு தகவல்

சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்- மத்திய அரசு தகவல்

ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதற்காக மத்திய அரசின் ‘ஆதர்ஷ்’ என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் மொத்தம் 1,253 ரெயில் நிலையங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்தன. இதில் இதுவரை 1,218 ரெயில் நிலையங்களில் பணிகள் முடிந்துள்ளன. இன்னும் 35 ரெயில் நிலையங்களில் மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டும். அவை 2023-2024-ம் நிதியாண்டுக்குள் முடிக்கப்பட்டுவிடும் என ரெயில்வே தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் இந்த திட்டத்துக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட ரெயில் நிலையங்களில் தமிழ்நாட்டில் சென்னை கோட்டத்தில் உள்ள சென்னை கடற்கரை, சென்னை சேத்துப்பட்டு, சென்னை பூங்கா, தாம்பரம், குரோம்பேட்டை, பரங்கிமலை, பெரம்பூர், கொருக்குப்பேட்டை, ராயபுரம், திருவள்ளூர், ஆவடி, திருநின்றவூர், திருவாலங்காடு, அரக்கோணம், காஞ்சீபுரம், மணவூர், செஞ்சி பனம்பாக்கம், காட்பாடி, மதுரை கோட்டத்தில் அவனீஸ்வரம், கொட்டாரக்கரை, கூடல்நகர், பாம்பன், புதுக்கோட்டை, புனலூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், தேனி, தென்காசி சந்திப்பு, தூத்துக்குடி, விருதுநகர் சந்திப்பு, கடையநல்லூர், குந்தாரா, திருப்பரங்குன்றம், திருமங்கலம், சேலம் கோட்டத்தில் கோவை சந்திப்பு, பீளமேடு, சேலம், திருப்பூர், இருகூர், திருச்சி கோட்டத்தில் திருச்சி, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், அரியலூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகூர், புதுச்சேரி, திருவாரூர், விருத்தாசலம், வேலூர் கண்டோன்மென்டு ஆகியவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments