தமிழக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த சரவணகுமரன் சொந்த காரணங்களுக்காக பா.ஜ.க.வில் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், தொடர்ந்து கட்சியின் கொள்கையான தேசியம் மற்றும் தெய்வீகத்திற்கு பணி செய்வதாகவும் கடிதம் கொடுத்துள்ளார். அவருடைய கடிதத்தினை ஏற்றுக்கொண்டு இன்றுமுதல் அவர் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார். மத்திய அரசின் உயர் பதவியினை துறந்து தேச பணிக்காக கட்சியில் இணைந்து இதுநாள் வரை சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார்.சொந்த பணியினை விரைவில் முடித்து தேச முன்னேற்றத்திற்கு நல்ல பொறுப்புகளை ஏற்று மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.