கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 2-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 6-ம் திருவிழாவான நேற்று மாலை சமய உரையும், அதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. அதன்பிறகு 9 மணிக்கு அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வீதி உலா நடந்தது. கோவி லில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி கன்னியம்பலம் மண்ட பத்தை சென்றடைந்தது. அந்த மண்டபத்துக்குள் அம்மன் சிறிது நேரம் இளைப்பாறும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்ம னுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அங்கி ருந்து வாகன பவனி புறப்பட்டு சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்த டைந்தது. வழிநெடு கிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து “திருக்கணம்” சாத்தி வழிபட்டனர்
இந்த நிகழ்ச்சியில் சூரியனார் கோவில் ஸ்ரீ சிவாக்கிர யோகிகள் ஆதீனத்தின் கட்டளை சுவாமி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 7-வது நாளான இன்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு அம்மனுக்கு தங்க கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அ ணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. பிற்பகல் 3.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு பரதநாட்டி யமும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.