Tuesday, October 3, 2023
No menu items!
Homeசினிமா செய்திகள்புது முகங்களின் புது முயற்சியில் உருவாகியுள்ள 'பஜாரி -தி பிகினிங்'

புது முகங்களின் புது முயற்சியில் உருவாகியுள்ள ‘பஜாரி -தி பிகினிங்’

இயக்குனர் நிஜந்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பஜாரி- தி பிகினிங்’ . இதில், அறிமுக நடிகர் ஜான் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும், ஹாசினி, ‘காக்கா முட்டை ‘புகழ் நடிகை சாந்தி மணி, தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜோ புரொடக்ஷன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வில்லிங்டன் தாமஸ் தயாரித்திருக்கிறார். பிரசன்னா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிரண் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இப்படம் குறித்து பி. சிரஞ்சீவி பேசியதாவது, 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராணி ஒருவரின் கதை தான் இந்த ஹாரர் திரில்லர் திரைப்படமான ‘பஜாரி’. 2000 வருடத்திற்கு முன் அந்த ராணியை அந்த ஊர் மக்கள் விவரிக்க இயலாத காரணத்திற்காக கொலை செய்திருப்பார்கள். அவர்களை பழி வாங்குவதற்காக அரக்கியாக அவர் அவதாரம் எடுக்கிறார். அரக்கியான பிறகு அவர் யாரை அழிக்கிறார்? என்பதனை படத்தின் முதல் பாகமாகவும், அவர் ராணியாக மக்களுக்கு சேவை செய்ததும், தவறான புரிதலுக்காக அவர் கொலை செய்யப்பட்டது போன்றவை இரண்டாம் பாகமாகவும் உருவாக்கி இருக்கிறோம்.

‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த சாந்தி மணி எனும் பாட்டி தான் கதையை விவரிக்கும் கதை சொல்லியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் சர்வதேச தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறோம். விரைவில் இசை மற்றும் முன்னோட்டம் வெளியாகும் என்று கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments