Tuesday, June 6, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் காப்புகட்டு நிகழ்ச்சி

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் காப்புகட்டு நிகழ்ச்சி

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் தூக்க வில்லில் ஏறும் தூக்ககாரர்களின் மருத்துவ பரிசோதனை நேற்று முடிவடைந்து சான்றிதழ் கொடுக்கப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட தூக்ககாரர்கள் இன்று முதல் கோவில் வளாகத்திலேயே தங்கி இரு நேரம் கடலில் குளித்துவிட்டு நமஸ்காரம் செய்து விரதமிருந்து அம்மனை வணங்குவர். இதையொட்டி இன்று காலை 5 மணிக்கு வழக்கம்போல் பள்ளியுணர்தல், திருநடைதிறத்தல், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷபூஜையும் 5.30 மணிக்கு மஹா கணபதி ஹோமம், 6.30க்கு சோபானசங்கீதம், 8 மணிக்கு பூஜை, 8.30 முதல் தூக்கநேர்ச்சையின் பெயர் பதிவு செய்துள்ளவர்களின் குலுக்கல் மற்றும் தூக்ககாரர்களின் காப்புகட்டு நடந்தது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனை 9 மணிக்கு தூக்ககாரர்கள் குளித்துவிட்டு மூலஸ்தான ஆலயத்திற்கு சென்று வினாயகருக்கு தேங்காய் உடைத்துவிட்டு, அங்கிருந்து வெங்கஞ்சி ஆலயம் வந்து நமஸ்காரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. 9.30 மணிக்கு இரவு பூஜை, எழுந்தருளுதல், பின்னர் நடை அடைக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments