Thursday, March 30, 2023
No menu items!
Google search engine
Homeதமிழக செய்திகள்திருப்பூரில் லஞ்சம் வாங்கி கைதான உதவி செயற்பொறியாளரின் உதவியாளர் காரில் கட்டு கட்டாக பணம்- ரூ.6.48...

திருப்பூரில் லஞ்சம் வாங்கி கைதான உதவி செயற்பொறியாளரின் உதவியாளர் காரில் கட்டு கட்டாக பணம்- ரூ.6.48 லட்சம் பறிமுதல்

திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (42). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் சொத்து வாங்கியுள்ளார். அதற்கான பத்திரப்பதிவுகளை, திருப்பூர் நெருப்பெரிச்சரில் பத்திரப்பதிவு ஜாயின்ட்-2 அலுவலகத்தில் மேற்கொண்டார். கட்டடத்தின் மதிப்பீட்டு அறிக்கை அளிக்க, களப்பணிக்காக, மதுரையில் உள்ள பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி., அலுவலகத்துக்கு பரிந்துரைத்தனர். மதுரையில் உள்ள உதவி செயற்பொறியாளர் (கட்டடம்) ராமமூர்த்தி, திருப்பூர் வந்து அக்கட்டிடத்தை கள ஆய்வு செய்தார்.

இதற்கான மதிப்பீட்டு அறிக்கையை அளிக்காமல் காலம் கடத்தியதோடு, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு கோபாலகிருஷ்ணன் கொடுக்க முன் வராததால் பின்னர் ரூ.75 ஆயிரம் ரூபாயாக குறைத்திருக்கிறார். இருந்த போதிலும் பணத்தை கொடுக்க விரும்பாத கோபாலகிருஷ்ணன் குறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில் லஞ்ச பணத்தை வாங்குவதற்காக, உதவி செயற்பொறியாளரின் உதவியாளர் குமார், (45) என்பவர் வந்துள்ளார். அவரிடம் கோபாலகிருஷ்ணன் பணத்தை வழங்கியபோது, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார் உதவியாளர் குமாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரது காரில் சோதனை செய்தனர். அப்போது காருக்குள் கட்டுகட்டாக பணம் இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைத்தனர். அந்த பணம் குறித்து கேட்டபோது அதற்கான பதில் அவரிடம் இல்லை. இதனையடுத்து காரில் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ. 6 லட்சத்து, 48 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் உதவியாளர் குமார் கைது செய்த போலீசார் உதவி செய்ய பொறியாளர் ராமமூர்த்தியை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments