Friday, June 2, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்குமரி மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

குமரி மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது :- தமிழ் நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு மின் ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனை வோர்கள் ஆகிய நிறுவ னங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகா மையிலேயே வழங்கி வருகின்றது. மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது. இதனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக் கான அரசின் இணையவழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகா மையிலேயே வழங்குவதற் கான வழிவகை செய்யப் பட்டுள்ளது.

இத்திட்டத்தின் நோக் கமானது, அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத் திடவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிக ரித்து இ-சேவை மையங்க ளில் பொது மக்கள் காத் திருக்கும் நேரத்தினை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும். எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ள நபர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய முறையில் மட் டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத் திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லை னில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in, https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்த வேண்டும். விண்ணப்பங்களை 14.04.2023 இரவு 8 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். கிராமப்பு றங்களில் இ-சேவைமையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3000 ஆகும். நகர்ப்புறத்திற்கான கட்ட ணம் ரூ.6000 ஆகும். இவ் விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட் டுமே செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்க் குரிய பயனர் பெயர் மற் றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக் கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங் கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments