முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது தவறை திருத்திக் கொண்டுள்ளார். இனிமேல் அவர் அ.தி.மு.க. பற்றியோ, அதன் தலைவர்கள் பற்றியோ விமர்சனம் செய்ய மாட்டார். ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோருடன் அ.தி.மு.க.வுக்கு எந்த தொடர்பும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் தனது மகன் ரவீந்திரநாத் வெற்றிபெற்றால் போது என்று நினைத்ததால் தான் ஓ.பன்னீர்செல்வம் பணத்தை வாரி இறைத்து செலவு செய்தார். இவ்வாறு அவர் கூறினார்.