நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா மற்றும் அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் விவசாயி களிடமிருந்து கோரிக்கை மனுகளை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து விவசாயிகள் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடிக்காக ஜூன் 1-ந் தேதி பேச்சிபாறை அணை திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு 15 நாட்களாகியும் கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. ஏற்கனவே சானல்களை தூர்வார வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் சானல்கள் தூர்வாரப்படவில்லை.
எனவே உடனடியாக சானல்களை தூர்வார நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பயிர்கள் கருகும் நிலை ஏற்படும். சானல்களில் உள்ள ஆக்கி ரமிப்புகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண் டும். பழையாற்றின் கரையில் உள்ள மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டுள்ளது. வள்ளியாற்றில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் பிளாட்டு களாக மாற்றப்பட்டு வரு கிறது. அனுமதி பெறாமல் பல்வேறு இடங்களில் பிளாட்டுகள் அமைக்கப் பட்டுள்ளது. அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது கன்னிப்பூ சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. நடவு பணியில் பெண்கள் தான் அதிக அளவு ஈடுபடுவார்கள். தற்பொழுது ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேரடி விதை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேரடி விவசாயம் செய்வதால் மகசூல் குறையும்.
எனவே எந்திரம் மூலமாக நடவு பணி மேற்கொள்வதற்கு நடவு எந்திரம் மானிய விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவு எந்திரம் மூலமாக நடவு செய்யும் போது, மகசூல் அதிக அளவு கிடைக்கும். தென்னை மரங்களில் நோய் களின் தாக்கம் அதிக ரித்து வருகிறது. இதனால் மகசூல் குறைந்துள்ளது. தேங்காய் விலையும் குறை வாக உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தென்னை மரத்தில் தேங்காய் வெட்டுதற்கு ரூ.30 முதல் ரூ.50 வரை கொடுக்க வேண்டியது உள்ளது. அந்த அளவிற்கு தேங்காய் உற்பத்தி இல்லை. தற்பொழுது பனை மரத்திற்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. எனவே பனை மரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதற்கு பதில் அளித்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:- குமரி மாவட்டம் முழுவதும் சானல்களை தூர்வாருவதற்கு ரூ.5 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து சானல்களும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். நாளை (16-ந் தேதி) திருவி தாங்கோடு, இரணியல், சேரமங்கலம், முட்டம், ஆசா ரிப்பள்ளம், அத்திக்கடை, சம்பகுளம், கோட்டையடி சானல்கள் தூர்வாரப்ப டும். 19-ந் தேதி பட்டம் கால்வாய், தேங்காய் பட்டணம், தேவி கோடு, மிடாலம் பகுதி யில் உள்ள சானல்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்பொழுது பிரதான சானல்களில் தண்ணீர் சென்று கொண்டு இருப்பதால் படிப்படியாக தூர்வார நடவடிக்கை மேற் கொள் வோம். பல்வேறு இடங்களில் சாகுபடி பணி மேற் கொள்ளப்பட்டு உள்ளதால் விவசாயிகளிடம் கருத்து கேட்ட பிறகு பிரதான கால்வாய் களில் தண்ணீரை அடைத்து தூர்வார நடவ டிக்கை எடுக்கப்படும். சானல்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளுக்கு தேவையான நடவு எந்திரம் மானிய விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விளைநிலங்களை பிளாட்டு களாக மாற்றினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.