Tuesday, September 26, 2023
No menu items!
HomeUncategorizedஅகமதுநகர் மாவட்ட பெயரை மாற்றுகிறது மகாராஷ்டிரா அரசு

அகமதுநகர் மாவட்ட பெயரை மாற்றுகிறது மகாராஷ்டிரா அரசு

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷிண்டே தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இவர் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள சௌண்டி என்ற இடத்தில் நடைபெற்ற 18-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அஹில்யாதேவி ஹோல்கரின் 298-வது பிறந்த நாள் தின விழாவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ”நம்முடைய அரசு சத்ரபதி சிவாஜி மற்றும் அஹில்யாதேவி ஹோல்கர் ஆகியோர் அமைத்த ஆட்சியின் இலட்சியத்தை மனதில் கொண்டு அரசு செயல்படுகிறது. எனவே, உங்கள் அனைவரின் விருப்பத்தின்படி, அகமதுநகர் என இருந்த மாவட்டத்தின் பெயரை அஹில்யாதேவி ஹோல்கர் என மாற்ற முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே, துணை முதல்வரான தேவேந்திர பட்நாவிஸ், அகமதுநகர் என்றிருக்கும் நகரின் பெயரை அஹில்யாநகர் என மாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் ஷிண்டே இதை அறிவித்துள்ளார். 15-ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த அகமது நிஜாம் ஷா நினைவாக அகமதுநகர் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அகமது நகர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரான புனேயில் இருந்து சுமார் 120 கி.மீட்டர் வடகிழக்கு திசையில் அமைந்துள்ளது. இந்தூர் மாநிலத்தை 18-வது நூற்றாண்டில் அஹில்யாதேவி ஹோல்கர் ஆட்சி செய்துள்ளார். அதன்காரணமாக தற்போது ஷிண்டே அரசு பெயர் மாற்றுக்கிறது. ஏற்கனவே, மகாராஷ்டிரா மாநில அரசு ஔரங்காபாத், ஒஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை மாற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments