Thursday, September 28, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்வள்ளவிளை - எடப்பாடு இரவிபுத்தன்துறை சாலையில் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்

வள்ளவிளை – எடப்பாடு இரவிபுத்தன்துறை சாலையில் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்

குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சி களில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலுவிடம் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஒரு கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலையான பரசேரி – திங்கள்நகர் – புதுக்கடை சாலை கடைசியாக 2016-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்த சாலையின் நடுப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள சுனாமி கூட்டு குடிநீர் திட்டத்தின் ராட்சத சிமெண்ட் குழாயில் நீர் அழுத்தத்தால் ஏற்படும் உடைப்புகளாலும், புயல், மழை காரணங்களாலும் சாலை முழுவதுமாக பழுதடைந்துள்ளது.

இந்த சாலை மாவட்டத்தின் மிக முக்கியமான போக்குவரத்து சாலை. இந்த சாலையில் பரசேரி-–திக்கணங்கோடு, திக்கணங்கோடு-–கருங்கல் என இரு கட்டங்களாக சாலைகள் சீரமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால், மிகவும் பழுதடைந்துள்ள கருங்கல்-புதுக்கடை சாலை எந்த திட்டத்திலும் இதுவரை சேர்க்கப்படவில்லை. ஆகவே, கருங்கல்-– புதுக்கடை வரை சாலையை விரிவாக்கம் செய்து உயர்ந்த தரத்துடன் முழுமையாக சீரமைக்க வேண்டும். ஏழுதேசம் மற்றும் ஆறுதேசம் கிராமங்கள் வழியாக செல்லும் கன்னியாகுமரி பழைய உச்சக்கடை சாலை கணபதியான்கடவு முதல் விரிவிளை வரையுள்ள சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட வள்ளவிளை –எடப்பாடு– இரவிப்புத்தன்துறை சாலை மற்றும் முள்ளூர்துறை-அரையன்தோப்பு-தேங்காப்பட்டணம் சாலை ஆகிய 2 சாலைகளும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கடல் சீற்றத்தால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த 2 சாலைகளும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் மிகமுக்கியமான சாலைகளாகும். இந்த 2 சாலைகளையும் ரூ.29 கோடி மதிப்பீட்டில் கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைத்து நிரந்தரமாக சாலை சீரமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற மானிய கோரிக்கை எண் 21 -ல் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து ஒரு வருடம் முடிந்த பிறகும் இதுவரை கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஆகவே கடல் சீற்றம் தொடங்கும் முன்பு பொதுமக்கள் நலன்கருதி கடலரிப்பு தடுப்புச்சுவர் அமைத்து இந்த 2 சாலைகளையும் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் முஞ்சிறையிலிருந்து மங்காடு வழியாக கோழிவிளை செல்லும் மங்காடு சாலை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், புயல், மழை காரணங்களாலும் சாலை பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆகவே, மங்காடு சாலையை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு பணி நிமித்தமாக அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வருகைதரும் போது அவர்கள் தங்குவதற்காக எந்தவித வசதியும் இல்லை. இதனால் அவர்கள் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகர்கோவிலில் உள்ள அரசு பயணிகள் விடுதியில் தங்க வேண்டிய நிலை காணப்படு கிறது. ஆகவே கிள்ளியூர் பகுதியில் பயணியர் தங்கும் விடுதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கோ ரிக்கை களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments