நடிகர் தனஷ் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இந்தி படம் “ராஞ்சனா”. இப்படத்தில் இடம்பெற்ற ஹூவா மை தேரா பாடலுக்கு ஒரு இளம் தம்பதி நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடகர் ஜஸ்விந்தர் சிங் மற்றும் ஷிராஸ் உப்பல் ஆகியோர் பாடியிருந்த இந்த பாடல் ஹிட் ஆகி இருந்தது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இந்த பாடலுக்கு சக்தி கோக்ரு-முகன் கோத்தாரி என்ற இளம்ஜோடி நடனமாடிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது. இந்த வீடியோ பலரையும் கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.