Tuesday, October 3, 2023
No menu items!
Homeஇந்தியா செய்திகள்மனைவி, குழந்தைகளோடு 500 ரூபாய் நோட்டுகளுடன் செல்பி எடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட போலீஸ் அதிகாரி

மனைவி, குழந்தைகளோடு 500 ரூபாய் நோட்டுகளுடன் செல்பி எடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட போலீஸ் அதிகாரி

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. போலீஸ் நிலைய பொறுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பண மூட்டைகளுடன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த படத்தில் ரமேஷ் சந்திர சஹானியின் மனைவி மற்றும் குழந்தைகள் 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் போஸ் கொடுத்தவாறு இருந்தனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பணக்குவியலுடன் செல்பி எடுத்து அதை வெளியிட்ட போலீஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பான விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கின. இதையடுத்து அந்த போலீஸ்காரர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். அப்போது அந்த போலீஸ் அதிகாரி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனக்கு சொந்தமான சொத்து ஒன்றை விற்றதன்மூலம் கிடைத்த ரூ.14 லட்சம் பணம் என்று தெரிவித்தார். மேலும், அவர் தன்னை நியாயப்படுத்தும் வகையிலான கருத்துகளை விசாரணையின்போது தெரிவித்துள்ளார். அந்த படம் கடந்த 2021 நவம்பர் மாதம் 14-ந்தேதி எடுக்கப்பட்டது என்றும், அது முறைகேடாக சம்பாதித்த பணம் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

ஆனாலும் பணக்குவியலுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் இருப்பது போன்ற படம் அவரது வேலைக்கும் வேட்டு வைத்துள்ளது. விசாரணை நிறைவில் போலீஸ் அதிகாரியான ரமேஷ் சந்திர சஹானி காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் போலீஸ்காரரின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் நோட்டு மூட்டைகளுடன் உள்ளனர். இந்த விவகாரத்தை நாங்கள் கவனத்தில் கொண் டுள்ளோம், அந்த போலீஸ் காரர் காவல் துறையின் சாதாரண பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments