Friday, June 2, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்பூதப்பாண்டியில் சொத்து தகராறில் தாயை வெட்டிக்கொன்றதொழிலாளி ஜெயிலில் அடைப்பு

பூதப்பாண்டியில் சொத்து தகராறில் தாயை வெட்டிக்கொன்றதொழிலாளி ஜெயிலில் அடைப்பு

பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை பெருங் கடையை சேர்ந்தவர் பவுல் (வயது 73). இவரது மனைவி அமலோற்பவம் (70). இவர்களுக்கு மோகன்தாஸ் (52) என்ற மகனும் 2 மகள் களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. மோகன்தாஸ் தொழி லாளியாக வேலை செய்ததுடன் ஆட்டோவும் ஓட்டி வந்தார். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். மோகன்தாஸ் தாய்-தந்தையுடன் வசித்து வந்தார். சொத்து பிரச்சினை காரணமாக மோகன்தாசுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு மோகன் தாஸ் குடிபோதையில் தாய்-தந்தை வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த அவர் இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் அமலோற்பவம் சம்பவ இடத்திலேயே பலியானார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பவுலை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்தாசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன்தாஸ் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- நான் வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இதனால் எனக்கும், எனது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அவரது சொத்துக்களை எனக்கு தரவில்லை. எனது சகோதரிகளுக்கு மட்டும் கொடுத்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முக்கடல் அணை பகுதியில் கிடந்த நிலம் ஒன்றை விற்பனை செய்தார். அதன் மூலமாக ரூ.30 லட்சம் கிடைத்தது. அந்த பணத்தில் ரூ.15 லட்சத்தை எனது சகோதரிகளுக்கு கொடுத் தார். மீதமுள்ள பணத்தை அவர் வைத்திருந்தார். நான் அவரிடம் பணம் கேட்டு தகராறு செய்தேன். ஆனால் அவர் பணம் தரவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தந்தை பவுல், தாயார் அமலோற்பவத்தை வெட்டினேன்.இவ்வாறு அவர் கூறினார். கைது செய்யப்பட்ட மோகன்தாஸை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி னார்கள். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments