குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரப் பகுதியிலும் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழுவினர் இன்று காலை ராமன் புதூர் புன்னை நகர் சந்திப்பு பகுதியில் ஆட்டோவில் கொண்டுவரப்பட்ட தக்காளி வியாபாரி ஒருவரிடம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் கவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தக்காளி வியாபாரிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவரிடம் இருந்த பிளாஸ்டிக் கவர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.