கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சாந்தம்பாறை, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 வருடங்களாக தனிக்காட்டு ராஜாவாக சுற்றிவந்த அரிசிக்கொம்பன் யானை தாக்கி 10 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என போராட்டம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கேரளவனத்துறையினர் அரிசிக்கொம்பன் யானை கழுத்தில் சிக்னல் காலர் ஐடி பொருத்தி தேக்கடி வனப்பகுதியில் விட்டனர். அங்கிருந்து லோயர்கேம்ப் வழியாக படிப்படியாக முன்னேறிய அரிசிக்கொம்பன் கடந்த மாதம் 27-ந்தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சுமார் ஒரு வார போராட்டத்திற்கு பின்பு கும்கி யானைகள் உதவியுடன் அரிசிக்கொம்பன் பிடிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டவனப்பகுதியில் விடப்பட்டது.