Monday, December 4, 2023
No menu items!
Homeஇந்தியா செய்திகள்டெல்லி எம்.எல்.ஏ.க்களுக்கு 67 சதவீதம் சம்பள உயர்வு - ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி

டெல்லி எம்.எல்.ஏ.க்களுக்கு 67 சதவீதம் சம்பள உயர்வு – ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு கோரி ஜனாதிபதிக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது. அதற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால் அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் 67சதவீதம் சம்பள உயர்வு பெறுகிறார்கள். இதுவரை டெல்லி எம்.எல்.ஏக்கள் மாத சம்பளமாக ரூ.54 ஆயிரம் பெற்று வருகிறார்கள். இனி ஊதிய உயர்வுடன் ரூ.90 ஆயிரம் பெற உள்ளனர். அதற்கேற்ப அவர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் இதர படி பலன்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தொகுதி உதவித்தொகை, டெலிபோன் படி, பயணப்படி, செயலக பணப்பலன் என பல்வேறு படிகளும் கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளன. அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.7 லட்சம் வரை ஊதிய உயர்வு கிடைக்கப் போகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்திருப்பதாக சட்டமன்ற விவகாரத்துறை தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments