Sunday, September 24, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு அதிகபாரம் ஏற்றி சென்ற 6 வாகனங்கள் பறிமுதல்

களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு அதிகபாரம் ஏற்றி சென்ற 6 வாகனங்கள் பறிமுதல்

குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங் களில் இருந்தும் நூற்றுக்க ணக்கான லாரிகள் கனிம வளங்களை வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி கேரளா விற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமை யாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை தனிப்பிரிவு போலீ சார் களியக்காவிளை பகுதி யில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 6 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது வாகனங்களில் கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீசார் வாகனங்களை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் களியக்காவிளை பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்ததாக 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments