அரியலூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வின் முதல் நாள் தமிழ் தேர்வை எழுதாத சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மறுபடியும் வாய்ப்பு அளிக்கப்படும். தொடர்ந்து தமிழக அரசு, மாணவர்கள் அதிகமாக பள்ளிக்கு வர வேண்டும் என்று கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பார். பெரம்பலூர் அரசு மருத்துவ கல்லூரியை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.