கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சாபு. தொழிலாளியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக முண்டகாயம் போலீசார் விசாரணை நடத்தி சாபுவை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு சங்கனாச்சேரி போக்சோ விரைவு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு கூறினார். இதில் சாபுவுக்கு 50 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும், மேலும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறி இருந்தார்.