Thursday, September 28, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்5 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம்

5 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்திலும் தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தக்காளி விலையை குறைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ரேசன் கடைகள் மூலமாக தக்காளியை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து ரேசன் கடைகள் மூலமாக தற்போது தக்காளி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதேபோல நாகர்கோவில் ஊட்டுவாழ்ம டம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வமாக வந்து தக்காளியை வாங்கி சென்றனர். ஒரு நபருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டது.

இதேபோல மாவட்டத்தில் உள்ள மேலும் 4 ரேசன் கடைகளில் தக்காளி பொதுமக்களுக்கு வழங்க கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில் மறவன்குடியிருப்பு, கலைநகர், புன்னைநகர் மற்றும் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே என மேலும் 4 ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி வினியோகம் செய்யப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வெளி மார்க்கெட்டில் இன்றும் தக்காளி விலை அதிகமாகவே இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்டா மார்க்கெட், கனக மூலம் சந்தை மற்றும் கோட்டார் மார்க்கெட்டு களில் தக்காளி ரூ.120-க்கு விற்பனையானது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், “தக்காளியின் வரத்து குறைவாக உள்ளதால் தொடர்ந்து ரூ.120-க்கு விற்கப்பட்டு வருகிறது. தக்காளியின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது. பெங்களூர் பகுதிகளில் இருந்து வழக்கமாக வரும் தக்காளியை விட பாதி அளவே தக்காளிகள் மார்க்கெட்டு களுக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது” என்றனர். ரேஷன் கடைகளில் தக்காளி வினியோகம் செய்யப்பட்டது. இது குறித்து இல்லத்தரசிகளிடம் கேட்டபோது,” மார்க்கெட்டுகளில் தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் நாங்கள் தக்காளி பயன்பாட்டை குறைத்து வந்தோம். வழக்கமாக ஒரு கிலோ தக்காளியை வாங்கி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிராம் கணக்கில் தான் தக்காளியை வாங்குகிறோம். இந்த நிலையில் ரேசன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 விற்பனை செய்யப்படுவது வரவேற்கத் தகக்கது. ஒரு சில கடைகளில் மட்டுமே தற்போது தக்காளி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து ரேசன் கடைகளிலும் தக்காளியை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments