Tuesday, October 3, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்விஷ சாராயம் உயிரிழப்பை கண்டித்து நாகர்கோவிலில் 29-ந்தேதி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

விஷ சாராயம் உயிரிழப்பை கண்டித்து நாகர்கோவிலில் 29-ந்தேதி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசை கண்டித்து 29-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன்,மாநகராட்சி கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், ஸ்ரீலிஜா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெஸீம், பொன் சுந்தர்நாத், இளையரணி செயலாளர் ஜெயசீலன், மாநகர முன்னாள் செயலாளர் சந்துரு உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளை தெரிவிப்பது, குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் அதிக ளவில் உறுப்பி னர்களை சேர்க்க வேண்டும், தமிழகத்தில் கள்ளச்சா ராயத்தை ஊக்குவித்த தி.மு.க. அரசை கண்டிப்பது, நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது, வருகிற 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப் பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments