Monday, December 4, 2023
No menu items!
Homeதமிழக செய்திகள்புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறப்பா?

புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறப்பா?

புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிகிச்சையின்போது கடந்த 21 மாதங்களில் 247 பச்சிளம் குழந்தைகள் இறந்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் டீன் கூறுகையில், ”தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்டிருந்ததற்கு பதில் அளிக்கப்பட்டதில் கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறந்ததாக கூறப்பட்டிருந்தது. இந்த குழந்தைகள் சிகிச்சை பலன் இல்லாமல், சிகிச்சை சரியில்லாமல் இறக்கவில்லை. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், எடைக்குறைவு, மூச்சுத்திணறல், பிறவி குறைபாடு, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் தான் இறந்துள்ளன. ராணியார் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிரசவ சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments