Tuesday, September 26, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்தக்கலையில் இன்று அதிகாலை 3500 கிலோ ரேசன் அரிசி 2 வாகனங்கள் பறிமுதல்

தக்கலையில் இன்று அதிகாலை 3500 கிலோ ரேசன் அரிசி 2 வாகனங்கள் பறிமுதல்

தக்கலை அருகே சுங்கான்கடை பகுதியில் இன்று அதிகாலையில் தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு வந்த மினி லாரியை அதிகாரிகள் கைகாட்டி நிறுத்தினர். ஆனால் அந்த லாரி நிற்காமல் அதிவேகமாக சென்றது. உடனே அதிகாரிகள் அந்த வாகனத்தினை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றதும் அந்த வாகனத்தினை டிரைவர் சாலையில் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். பின்னர் மினி லாரியை சோதனை செய்ததில் அதில் சுமார் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து தக்கலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது டிரைவர் தப்பி ஓடினார். சந்தேகம் அடைந்து அந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணை யில் 2 வாகனங்களிலும் கொண்டு வந்த ரேசன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்துவதற்கு கொண்டு சென்றது என தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உடையார்விளை அரசு கிட்டங்கியில் இன்று ஒப்படைக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments