Tuesday, September 26, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்குளிர் சாதன வசதியுடன் கூடிய 2 அதிநவீன படகுகள் இன்று முதல் இயக்கம்

குளிர் சாதன வசதியுடன் கூடிய 2 அதிநவீன படகுகள் இன்று முதல் இயக்கம்

கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்தினை பார்வையிட்டும் வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கு வசதிக்காக கன்னியாகுமரியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 2 அதிநவீன சொகுசு படகுகள் வாங்குவதற்கு உரிய நிதி ஒதுக்கீடு வழங்கிட முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அன்றைய தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்த தளவாய்சுந்தரம் கோரிக்கை வைத்தார்.

கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 2019-ம் ஆண்டில் ரூ.8 கோடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 2 அதிநவீன சொகுசு படகுகள் வாங்கப்பட்டு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இந்த 2 அதிநவீன படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு பயன்படுத்தப்படாமலேயே கடந்த 2 ஆண்டு காலமாக கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. எனவே தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அரசிடம் இந்த படகுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் இது தொடர்பாக கடந்த ஆண்டு சென்னை நந்தனத்தில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கன்னியாகுமரியில் 2 அதிநவீன சொகுசு படகுகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்று தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து கூறுகையில், இந்த படகுகளை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் பணிகளை முடுக்கிவிட்டார். இந்த நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்த குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த அதிநவீன சொகுசு படகுகளின் சேவையினை இன்று அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்துள்ளார். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் இந்த சேவை பயன்பாட்டுக்கு வந்து உள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் நன்றி தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments