Tuesday, September 26, 2023
No menu items!
Homeஇந்தியா செய்திகள்டெல்லியில் மரப்பெட்டிக்குள் இறந்து கிடந்த 2 குழந்தைகள்- போலீஸ் விசாரணை

டெல்லியில் மரப்பெட்டிக்குள் இறந்து கிடந்த 2 குழந்தைகள்- போலீஸ் விசாரணை

டெல்லயின் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மரப்பெட்டியில் இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது. ஜாமியா நகரைச் சேர்ந்த காவலாளி பல்பீரின் குழந்தைகள் நீரஜ் (வயது 8), ஆர்த்தி (வயது 6) ஆகிய இருவரும் நேற்று மதியம் பெற்றோருடன் சாப்பிட்டுள்ளனர். பின்னர் 3.30 மணியளவில் காணாமல் போயிவிட்டனர். வீட்டில் உள்ளவர்கள் நீண்டநேரமாக தேடியும் தகவல் கிடைக்கவில்லை. அதன்பின்னர் வீட்டில் இருந்த பெட்டியை திறந்து பார்த்தபோது இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்துள்ளனர். இதுபற்றி ஜாமியா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விளையாட்டாக பெட்டிக்குள் இறங்கியபோது லாக் ஆகியிருக்கலாம் என்றும், இதன் காரணமாக மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. குழந்தைகளின் உடலில் காயம் ஏதும் இல்லை என்றும், தற்செயலாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments