வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றுள்ளது. இரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடந்தது. முதலில் விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 47.1 ஓவர்களிர் 202 ரன்னில் சுருண்டது. அல்நாசர் அதிகபட்சமாக 58 ரன்னும், விர்த்தியா அரவிந்த் 40 ரன்னும் எடுத்தனர். கீமோ பவுல் 3 விக்கெட்டும், டொமினிக் டிரேக்ஸ், ஓடியன் சுமித், யானிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.