Sunday, September 24, 2023
No menu items!
Homeகுமரி செய்திகள்சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி மர பர்னிச்சர் கடைக்கு ரூ.15ஆயிரம் நஷ்ட ஈடு

சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி மர பர்னிச்சர் கடைக்கு ரூ.15ஆயிரம் நஷ்ட ஈடு

கணபதிபுரத்தைச் சார்ந்த வக்கீல் துரைராஜ் என்பவர் கணபதிபுரத்திலுள்ள ஒரு தனியார் மரபர்னிச்சர் கடையில் ரூ. 24,000 முன் பணம் செலுத்தி ஒரு அலுவலக டேபிள் ஒன்று செய்து தருமாறு கூறியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட கடைக்காரர் 20 நாட்களில் டேபிள் செய்து தந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் ஒத்துக் கொண்ட படி செய்து தரவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் அவர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ். உறுப்பினர் சங்கர் ஆகியோர் தனியார் மர பர்னிச்சர் கடையின் சேவை குறைப் பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோ ருக்கு ரூ. 15,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.மேலும் ஏற்கனவே முன்பணமாக செலுத்தப்பட்ட தொகை ரூ.24,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 3,000 ஆகியவற்றையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திர விட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments