குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:- தேங்காய் கொப்பரை களின் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தேங்காய்கள் விலை குறையும் போது விவசாயிகள் அவற்றை மதிப்பு கூட்டி தேங்காய் கொப்பரைகளாக விற்ப னை செய்து வருகின்றனர். சமீபகாலமாக தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருந்து வருகிறது. விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து விவசாயிகளை பாதுகாத்தி டும் வகையில், கன்னியா குமரி உள்பட 26 மாவட் டங்களில் அரவை கொப்ப ரை 55 ஆயிரம் மெட்ரிக் டன்னும், பந்து கொப்பரை ஆயிரம் மெட்ரிக் டன் என்கிற அளவில் குறைந்த பட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இதற்காக தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் 71 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குமரியில் வடசேரி மற்றும் திங்கள் சந்தை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா 50 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசினால் 2023-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலையான பந்து கொப்பரைக்கு கிலோவிற்கு ரூ.117.50 காசுகளும், அரவை கொப்பரைக்கு ரூ.108.60 காசுகள் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 291 கிலோ அரவை கொப்பரைகள் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் பணி ஏப்ரல் முதல் 2023 செப்டம்பர் வரை நடைபெறும். இதற்காக விவசாயிகள் தங்கள் பெயர்களை கொள்முதல் மையங்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். பெயர்களை பதிவு செய்ய நிலச் சிட்டா அசல், தென்னை சாகுபடி பரப்பு அடங்கிய அடங்கல் அசல், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். மத்திய அரசின் நாபெட் நிறுவனம் பரிந்துரைக்கும் குறைந்தபட்ச தரத்தில் கொப்பரை இருத்தல் அவசியம். கொப்பரை தேங்காய்களுக்கான தொகை சேமிப்பு கிடங்குகளில் கொப்பரை குவியல்கள் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குள் அதற்குரிய விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.