Tuesday, June 6, 2023
No menu items!
Homeஉலக செய்திகள்உகாண்டாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை- பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

உகாண்டாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை- பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகி றார்கள். அவர்களை சில நாடுகள் அங்கீகரித்து அதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. அதே வேளையில் சில நாடுகளில் ஓரினச் சேர்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரின சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாபடி ஓரின சேர்க்கையாளர் என அடையாளப்படுத்தப்படுவது குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த சட்டத்தின் கீழ் கடும் விதி மீறல்களில் ஈடுபடும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். ஏற்னவே உகாண்டா உள்பட 30-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒரே பாலின உறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான புதிய நடவடிக்கையாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிப்பது, அதில் ஈடுபடுவதற்கான திட்டம் தீட்டுவது ஆகிய வற்றுக்கு இச்சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா, ஓரினச்சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.

அவர் கூறும்போது, இந்த மசோதா நமது தேவாலய கலாச்சாரத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம் நமது பாரம்பரிய குடும்ப விழுமியங்கள், பன்முக கலாச்சாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றை பாதுகாக்க ஒரு விரிவான மற்றும் மேம்பட்ட சட்டத்தை நிறுவுவதாகும் என்றார். இந்த மசோதா பாராளுமன்றததில் 389 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. தற்போது மசோதா, ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கிடையே ஓரின சேர்க்கை எதிர்ப்பு மசோதாவை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். இது வெறுக்கத்தக்க சட்டம் என்று தெரிவித்தனர்.

மனித உரிமை ஆர்வலர் சாரா கசண்டே கூறும்போது, “உகாண்டாவின் வரலாற்றில் இன்று ஒரு சோகமான நாள். வெறுப்பை ஊக்குவிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க முயல்கிறது” என்றார் ஓரினச் சேர்க்கை ஆர்வலர் எரிக் நடாவுலா கூறும் போது, “பாராளுமன்றத்தில் இன்றைய நிகழ்வுகள் ஒழுக்கக்கேடானவை மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீதான முழுமையான தாக்குதல். எங்கள் எம்.பி.க்களின் தீர்ப்பு வெறுப்பு மற்றும் ஓரினச் சேர்க்கையால் மழுங்கடிக்கப்பட்டது பயமாக இருக்கிறது. இந்தக் கொடூர சட்டத்தால் யாருக்கு லாபம்?” இந்த மசோதா சட்டமாக கையொப்பமிடப்பட்டால், “கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமை, சமத்துவம் மற்றும் பாகுபாடு காட்டான உரிமைகள் உள்பட பல அடிப்படை உரிமைகளை மீறும்” என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments