கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தல மாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றா லும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் வரு வார்கள். இந்த 3 மாத கால மும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல், மே மாதமான கோடை விடு முறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணி கள் கன்னியாகும ரிக்கு படையெடுப்பார்கள். இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசனையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக இருந்தனர்.
கன்னியாகுமரிக்கும் கோடை விடுமுறை சீசனில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த 2½ மாதங்களில் மட்டும் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் கன்னியாகும ரிக்கு வருகை தந்து உள்ள னர். இதில் 5 லட்சம் சுற்று லா பயணிகள் மட்டுமே கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை யை படகில் சென்று பார் வையிட்டு வந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 98 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், மே மாதம் 2 லட்சத்து 40 ஆயிரம் பயணிகளும் ஜூன் மாதம் நேற்று வரை 75 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் படகில் சென்று விவேகா னந்தர் மண்டபத்தை பார் வையிட்டு வந்துள்ளனர். கோடை விடுமுறை சீசனின் கடைசி நாளான நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 8 ஆயிரத்து 600 பேர் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.