குமரி மாவட்டம் வில்லுக் குறி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ராஜ் ( வயது 53). விவசாயி.இவர் வில்லுக்குறியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை உட்பிரிவு செய்து பட்டா மாற்றுவதற்காக கடந்த 2007-ம் ஆண்டு விண்ணப்பம் செய்தி ருந்தார். அப்போது குருந்தன் கோடு கிராம சர்வேயராக இருந்த ஸ்டாலின் என்பவர், ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜோசப் ராஜ், இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் கடந்த 7.7.2007 அன்று, ஜோசப் ராஜ் லஞ்ச பணத்துடன் ஸ்டாலினை சந்தித்து, அந்த பணத்தை அளித்தார். அந்த பணத்தை ஸ்டாலின் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 8.8.2016 அன்று ஸ்டாலினை விடு தலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், நேற்று தீர்ப்பு அளித்தார். இதில் ஸ்டாலினுக்கு 1 வரு டம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில், வக்கீல் ரவி ஆஜர் ஆனார்.