Home » கன்னியாகுமரி செய்திகள் » சுசீந்திரம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் தற்கொலை
Cemetery-youth-suicide-in-pattukottai

சுசீந்திரம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் தற்கொலை

சுசீந்திரம் அருகே மணிக்கட்டி பொட்டலைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வக்குமார் (வயது 21), பட்டதாரி.

இவர், தன்னுடன் கல்லூரியில் படித்த ஒரு மாணவியை காதலித்து வந்தார். செல்வக்குமாருக்கும், அவரது காதலிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் செல்வக்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை முருகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார்.

செல்வக்குமார் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் செல்வக்குமார் காதலித்து வந்த அந்த பெண் இவரை திருமணம் செய்து கொள்ளுமாறு நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் செல்வக்குமார் தனக்கு தகுந்த வேலை கிடைத்த பிறகு அவரை திருமணம் செய்வதாக கூறி உள்ளார்.

இந்த நிலையில்தான் செல்வக்குமார் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட செல்வக்குமாரின் செல்போனை போலீசார் கைப்பற்றினார்கள். அதில் அவரது காதலி பல எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி இருந்தார். செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்டது கூட தெரியாமல் இன்றும் பல எஸ்.எம்.எஸ்.க் களை அனுப்பி இருந்தார்.

இதேபோல் வடசேரி கிருஷ்ணன் கோவில் அருகுவிளையைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவர், கடந்த 26-ந்தேதி விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.