Home » கன்னியாகுமரி செய்திகள் » நாகர்கோவிலில் பைக் திருடி சென்ற வாலிபர்கள் சிசிடிவி கேமராவில் உருவம் பதிவு
cctv camera

நாகர்கோவிலில் பைக் திருடி சென்ற வாலிபர்கள் சிசிடிவி கேமராவில் உருவம் பதிவு

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் நேற்று காலையில் நடைபெற்ற பைக் திருட்டு தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில், நெசவாளர் காலனி அருகே செழியன் என்பவரது வீடு உள்ளது. இவர் ராமேஸ்வரத்தில் வாகன ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்துள்ளார். எப்போதாவது ஊருக்கு வருவது வழக்கம். இவரது பைக் நெசவாளர் காலனியில் உள்ள வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 6 மணியளவில் 2 வாலிபர்கள் அந்த பகுதியை நோட்டமிட்டுள்ளனர். பின்னர் இதில் ஒருவன் பைக்கை எடுக்க முயன்றுள்ளார். மற்றொருவன் வெளியே யாராவது வருகிறார்களா என்று கண்காணித்து கொண்டிருந்தார். பின்னர் வாலிபர்களில் ஒருவன் பைக் திருடிவிட்டு வெளியே கொண்டு வந்துள்ளார். பைக் ஸ்டார்ட் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அது ஸ்டார்ட் ஆகாமல் சிரமப்பட்ட நிலையில், ஸ்டார்ட் செய்து எடுத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் பைக் மாயமானது அறிந்து பைக் உரிமையாளரின் உறவினர் நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சியை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 2 வாலிபர்கள் பைக்கை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. போலீசார் அந்த பைக் கொள்ளையர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே நாகர்கோவில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வடசேரி பகுதியில் நேற்று காலை சந்தேகத்திடமான முறையில் நின்ற பைக் திருடர் ஒருவரை பிடித்தனர். அவருக்கு இந்த பைக் கொள்ளையில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.