Home » கன்னியாகுமரி செய்திகள் » தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்; ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் தகவல்
You-can-apply-for-Elementary-Education-Graduate-Examination

தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்; ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் தகவல்

தொடக்க கல்வி பட்டய தேர்வுகள் 3-6-2020 அன்று தொடங்கி 22-6-2020 வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in. என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் பக்கம் 1 முதல் 3 வரையுள்ள அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

மேலும் தேர்வரின் தகுதி மற்றும் அறிவுரைகளையும் பின்பற்றி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.

பின்னர் தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகே அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் வசதி உள்ளது.

எனவே அங்கேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து தேர்வு கட்டணத்தையும் அங்கேயே செலுத்தலாம். எனவே தேர்வு எழுதுபவரே நேரில் சென்று அணுக வேண்டும். தேர்வு கட்டணமானது ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50-ம், முதல் மற்றும் 2-ம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ்களுக்கு தலா ரூ.100-ம், பதிவு மற்றும் சேவைக்கட்டணம் ரூ.15-ம், ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50-ம் செலுத்த வேண்டும்.

தேர்வு கட்டணம் செலுத்த மற்றும் விண்ணப்பத்தை வருகிற 30- ந் தேதி முதல் 4- ந்தேதி வரை சமர்ப்பிக்கலாம். தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும். தபால் வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.