Home » கன்னியாகுமரி செய்திகள் » அரசுப் பேருந்து மோதி தொழிலாளி பலி
Worker-Death

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி பலி

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.கருங்கல் அருகே தொலையாவட்டம், திட்டவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஏசுதாஸ் (47). தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை அவரது மகளுடன் நட்டாலம் நேசா்புரத்திலிருந்து மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது பரியாக்கரை பகுதியில் எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் கீழே விழுந்த அவா் மீது பேருந்தின் பின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அவரது மகள் அஜிதாவை(21) அப் பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.